பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் பூங்கா

கூடலூர், டிச. 28: கூடலூர் பஜாரில் இருந்து தோட்டமூலை செல்லும் சாலையில் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான குளிரூட்டும் நிலையம், ஆவின் பாலகம் ஆகியவை உள்ளன. பால் குளிரூட்டும் நிலையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு நடைபாதை, நிழற்குடை, கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், மலர்ச்செடிகள் நடப்படும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இதனால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. தற்போது இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை மற்றும் சிறுவர்கள் விளையாடும் சிறு நடைபாலம் உள்ளிட்டவை சேதமடைந்து வருகின்றன. ரூ.30 லட்சம் செலவு செய்தும் பணிகள் முடிவடையாமல், எந்தவித பயனுமின்றி,பராமரிப்பும் இன்றி பூங்கா வீணாகி வருகிறது. கூடலூர் பகுதி மக்களுக்கு பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத காரணத்தால், இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>