×

கரூர் சுக்காலியூர் ரவுண்டானாவில் படர்ந்துள்ள புற்களை உடனே அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

கரூர், டிச. 28:கரூர் நகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் அருகே திருச்சி, சேலம், மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கான சாலைகள் செல்கின்றன. திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்தும் வாகனங்களும் ரவுண்டானா வந்து சென்று வருகின்றன. சுக்காலியூர் ரவுண்டானா வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவின் உட்புறம் அதிகளவு புற்கள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.எனவே, இதனை அகற்றி தூய்மைப்படுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் ரவுண்டானாவை சுத்தம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Motorists ,removal ,Karur Sukkaliyur ,
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...