கரூர் பசுபதிபாளையம் சாலை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பம் மாற்றியமைக்க வலியுறுத்தல்

கரூர், டிச. 28: கரூர் பசுபதிபாளையம் வடக்குத் தெருவில் சாலைகள் சந்திக்கும் இடத்தில்  போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் வடக்குத்தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பல்வேறு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து ஏராளமான குடியிருப்புகள், நிறுவனங்களுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. சாலையின் மையப்பகுதியில் மின்கம்பம் உள்ளதால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வதாக கூறப்படுகிறது. எனவே, அனைவரின் நலன் கருதி இதனை மாற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். துறை அதிகாரிகள் இது குறித்து கண்காணித்து தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>