சவுராஷ்டிர சபை பொதுக்குழு கூட்டம்

ஈரோடு,டிச.28:  ஈரோடு சவுராஷ்டிர சபை சார்பில், வைகுண்ட ஏகாதசி விழா, அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆகியவை ஈரோட்டில் ஈரோடு செல்லாயம்மாள் மகாலில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு சபை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் குருபரன், துணைத்தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெருமாள், ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழா துவங்கப்பட்டது.

விழாவில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, நீட் ஆகிய தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பெற்றோருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோருக்கு பாதபூஜை செய்து வழிபட்டனர். சவுராஷ்ரா சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Related Stories:

>