அயோத்தியில் கோயில் கட்ட ஜன.,15ம் முதல் மக்கள் தொடர்பு இயக்கம்

ஈரோடு, டிச. 28:  ஈரோட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொது செயலாளர் மிலிந்த் பராண்டே நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமஜென்ம பூமி கோயில் கட்டும் பணியில் நாடு முழுவதும் உள்ள பக்தர்களும் தங்கள் பங்களிப்பை நல்கும் வகையில் அவர்களை தொடர்பு கொள்ள உதவுமாறு ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா, விஷ்வ ஹிந்து பரிஷத்தை கேட்டு கொண்டுள்ளது. இது தொடர்பாக ஜன.,15ம் தேதி முதல் பிப்.,27ம் தேதி வரை மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடக்கிறது.

கோயில் கட்டும் பணியில் எவ்வாறு பக்தர்கள் பங்கேற்க முடியும் என்பது குறித்து விளக்குவதுடன், அவர்களிடம் இருந்து நன்கொடைகளும் பெறப்படும். மக்கள் தொடர்பு திட்டம் மூலம் 4 லட்சம் கிராமங்களில் 11 கோடி குடும்பங்களை தொடர்பு கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் மக்களை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவுடன் இணைக்கும் பணியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் குடும்பங்களில் நேரடியாக தொடர்பு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. 60 ஆயிரம் தொண்டர்கள் இப்பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில அமைப்பு செயலர் ராமன் உடனிருந்தார்.

Related Stories:

>