கொலை வழக்கில் ஜாமீனில் வந்த குற்றவாளிசாட்சியை மிரட்டியதால் மீண்டும் சிறையிலடைப்பு

சென்னை, டிச.27: கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி சாட்சியை மிரட்டியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் செந்தில்குமார்  என்பவரை கடந்த செப்டம்பர் மாதம் கொலை செய்த வழக்கில் மயிலாப்பூர் லாலா தோட்டம் பகுதியை சேர்ந்த பழனி (38) என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியில் வந்த இவர், ராஜன் என்பவரை அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், செந்தில்குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக  ராஜன் உள்ளதால்,  அவரை சாட்சி சொல்ல வரக் கூடாது என்று கூறி பழனி தாக்கியதுடன், அதைமீறி வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த பழனியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>