- திருச்செந்தூர் முருகன் கோயில்
- திருச்செந்தூர்
- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
- தக்கார் அருள்முருகன்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி செப்டம்பர் மாத உண்டியல் எண்ணும் பணி நிர்வாக அலுவலக அரங்கில் அக்.8. 9ம் தேதி நடந்தது. கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில், இணை ஆணையர் ராமு மற்றும் அயல்பணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் 5 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 38 ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம் 1,905 கிராம், வெள்ளி 72.25 கிலோ, பித்தளை 84.67 கிலோ, செம்பு 80.54 கிலோ மற்றும் 1922 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
