தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று பிரசாரம்

திருப்பூர், டிச.27:  திருப்பூரில் தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று நேற்று பிரசாரம் மேற்கொண்டனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் நகரில், தி.மு.க. சார்பில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி துவங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு மாநகர ெபாறுப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் தொண்டர்கள் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்ததோடு, அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

இதேபோல், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன் தலைமையில் கட்சியினர் நல்லூர் முதலிபாளையம் பகுதியில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

Related Stories:

>