- தவெகா
- எடப்பாடி
- மொடக்குரிச்சி
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- ஆவல்பூந்துறை
- முதல் அமைச்சர்
- எடப்பாடியார்
மொடக்குறிச்சி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மொடக்குறிச்சி தொகுதியில் அவல்பூந்துறையில் பிரசாரம் மேற்கொண்டார். எடப்பாடியை வரவேற்கும் வகையில் தவெக சார்பில் பேனர் வைத்துள்ளனர். அதில், எங்களுடைய கஷ்டமான காலங்களில் எங்களுக்கு தோள் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார்க்கு நன்றி. நாங்கள் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகம் மொடக்குறிச்சி தொகுதி என்று எழுதிவைத்துள்ளனர். அந்த பேனரில் ஒரு பக்கம் விஜய், மறுபக்கம் எடப்பாடி படம் இடம் பெற்றுள்ளது.
