ஊட்டி, டிச.27: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2021ல் நடக்கும் மலர் கண்காட்சிக்காக நாற்று நடவு பணிகள் நாளை துவக்கப்படவுள்ளது.
2021 மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்கான நடவு பணிகள் நாளை ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. இதற்காக, பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தொட்டிகளில் மண் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை துவங்கி ஒரு மாதத்திற்கு நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்களை காண முடியும்.