×

பனிபொழிவு அதிகரிப்பால் வனங்களில் கடும் வறட்சி

ஊட்டி, டிச.27: முதுமலை மற்றும் மசினகுடி வனப்பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெயில் அதிகளவு உள்ளதால் வனங்கள் காயத் துவங்கியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக உறை பனி விழத் துவங்கியுள்ளது. அதேசமயம் பகல் நேரங்களில் வெயில் வாட்டுகிறது. இதனால், வனப்பகுதிகளில் உள்ள சிறு செடி, கொடிகள் மற்றும் புற்கள் காயத் துவங்கியுள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிறியூர், ஆனைகட்டி, மசினகுடி, பொக்காபுரம் போன்ற பகுதிகளில் பசுமை காணப்பட்டாலும், பெரும்பாலன பகுதிகளில் உள்ள புற்கள், செடி கொடிகள் காய்ந்துள்ளன.

ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விழும் உறை பனியின் போது இப்பகுதிகளில் உள்ள அனைத்து செடி செடிகளும் காய்ந்து கருகி விடும். இச்சமயங்களில் பல இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு பல ஆயிரம் ஏக்கர் வனங்கள் பரப்பளவில் உள்ள செடி,கொடிகள் கருகிவிடும். இம்முறை முன் எச்சரிக்கையாக இப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இருந்த போதிலும் இம்முறை பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தற்போது வனங்கள் காயத் துவங்கியுள்ளது. இதனால், கோைடயில் காட்டு தீ ஏற்படும் அச்சத்தில் வனத்துறையினர் உள்ளனர்.

Tags : drought ,forests ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!