×

புத்தாண்டை கொண்டாட ஓட்டல்களில் வண்ண விளக்கு அலங்காரம்

ஊட்டி,டிச.27:  புத்தாண்டை முன்னிட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக நட்சத்திர ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. புத்தாண்டை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் தற்போது ஓட்டல் அறைகளை ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக தற்போது சாதாரண ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனங்கள் மற்றும் பூங்காக்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அதேசமயம் தமிழக அரசு இம்முறை புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பெரும்பாலான ரெசார்ட்டுக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளன. எனினும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை சத்தமின்றி நடத்தவும் வாய்ப்புள்ளது.

Tags : hotels ,New Year ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!