×

பனப்பாக்கம் கிராமத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பால் தண்ணீர் நிரம்பாத ஏரி: விவசாயிகள் கவலை

 ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பனப்பாக்கம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 130 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலத்தில் தண்ணீர் நிரம்பினால் 400 ஏக்கர் பயிர்களை விவசாயம் செய்ய முடியும். இந்த விவசாயம் 3 போகம் செய்யமுடியும். இந்த பனப்பாக்கம் ஏரிக்கு பேரண்டூர் ஏரியிலிருந்து வரக்கூடிய வரத்துகால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பனப்பாக்கம் ஏரியில் தண்ணீர் நிரம்பவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, “பனப்பாக்கம் ஏரியை கடந்த 2013-2014ம் ஆண்டு உலக வங்கி நிதி மூலம் ரூ.43 லட்சத்தில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதேபோல் கடந்த 2019ம் ஆண்டு ரூ.40 லட்சத்தில் குடிமராமத்து பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார். பணிகளும் நடந்தது. ஆனால் அப்போது கூட ஏரியில் தண்ணீர் நிரம்பவில்லை. ஆனால் விவசாயிகளான நாங்கள் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சிதான் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் கடந்த 10 வருடங்களாக மழை குறைவால் தண்ணீர் இல்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பினால் தான் நாங்கள் 3 போகம் பயிர் செய்வோம். எனவே பனப்பாக்கம் ஏரிக்கு வரக்கூடிய நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்” என கூறினர். 

Tags : lake ,village ,Panappakkam ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!