கால்வாயில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் சந்தோஷ்(13). தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை 3 மணியளவில் சந்தோஷ் மற்றும் அவரது உறவுக்கார சிறுவன் ஆகிய 2 பேரும் கெஜேரிகுளம் என்ற இடத்தில் இணைப்பு கால்வாயில் செல்லும் நீரில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில், பூண்டியிலிருந்து வெளியேறும் நீர் இணைப்பு கால்வாயில் வேகமாக செல்வதால் குளிக்க சென்ற சந்தோஷ் நீரில் அடித்து செல்லப்பட்டான். உடன் வந்த சிறுவன் செடிகளை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் 2 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதில் சந்தோஷ் மட்டும் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டதால் மயங்கிய நிலையில் இருந்தான். உடனடியாக சந்தோஷை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>