×

தொட்டபெட்டா டெலஸ்கோப் மூடல்

ஊட்டி, டிச. 27: கொரோனா பாதிப்பு காரணமாக தொட்டபெட்டா டெலஸ்கோப் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சென்று அங்கு உள்ள டெலஸ்கோப் மூலம் இயற்கை அழகை மட்டுமின்றி, ஊட்டி நகரம், கோவை போன்ற பகுதிகளையும், தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுகதிகளையும் கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தொட்டபெட்டா சிகரத்தில் சுற்றுலாத்துறை மூலம் வைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூடப்பட்டுள்ளன. டெலஸ்கோப் அறை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை காணமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

Tags : Closure ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...