வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்

ஊட்டி, டிச. 27: தொடர் விடுமுறையின் காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில், வாகன நெரிசலை தவிர்க்க கமர்சியல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை வந்த நிலையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா, சூட்டிங்மட்டம் ஆகிய பகுதிகளை சுற்றுலா பயணிகள் மொய்த்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களால் நகரின் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, பூங்கா சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 மேலும் உணவு விடுதிகள், ஓட்டல்களில் மதிய நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோத்தகிரி சாலை சந்திப்பு முதல் தொட்டபெட்டா சிகரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 கி.மீ.,க்கு மேல் வாகனங்கள் காத்து நின்றன. செங்குத்தான மலைப்பாதையில் வாகனங்களை இயக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை உட்பட பல்வேறு சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

Related Stories:

>