×

வனங்களை ஒட்டிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு

ஊட்டி, டிச.27: நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட சிங்காரா, மாயார், மசினகுடி, சிறியூர் மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுக்கள் மற்றும் காட்டேஜ்கள் உள்ளன. இங்கு புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.
இதனால், சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்ல வாய்ப்புள்ளது.

ஆண்டு தோறும், மசினகுடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இது போன்ற சமயங்களில் சில ரெசார்ட்டுக்கள் மற்றும் காட்டேஜ்களில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் அத்து மீறுவது வழக்கம். தற்ேபாது பெரும்பாலான காட்டேஜ் மற்றும் ரெசார்ட்டுகள் மூடப்பட்ட போதிலும், ஒரு சில விடுதிகள் இயங்கி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ள போதிலும், இது போன்று புறநகர் மற்றும் வனங்களுக்கு நடுவே உள்ள காட்டேஜ்களில் மற்றும் ரெசார்ட்டுக்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த வாய்ப்புள்ளது.

இதனால் வனவிலங்குகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 முதுமலை புலிகள் காப்பக துணை இயக்கநர் ஸ்ரீகாந்த் கூறுகையில், பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்களில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் அதிக சத்தத்துடன் எந்த ஒரு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது, வனத்திற்குள் வாகனங்களை கொண்டுச் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக ஓட்டக் கூடாது.
 
விலங்குகளுக்கு உணவு கொடுப்பதற்கும், புகைப்பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை கண்காணிக்க வன ஊழியர்கள் ரோந்து பணிகளை மேற்க்கொள்வார்கள். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும், என்றார். இதே போன்ற முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் தெற்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட வனங்களை ஒட்டிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : celebrations ,areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...