நாசரேத், டிச. 27: நாசரேத் அருகே உள்ள மணிநகரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஆழ்வை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றிய செயலாளர்கள் முருகன், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாஜ்பாயின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டன. இதில் 17வது பூத் கிளைத்
தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.