×

மக்களை சந்திக்க போலீஸ் பர்மிசனா? வீடியோ காலில் பேசும் விஜய்க்கு தைரியம் இல்லை: ஜான் பாண்டியன் அட்டாக்

கொடைக்கானல்: தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று அளித்த பேட்டி: மக்களை சந்திப்பதற்கு தைரியம் இல்லாதவர்கள் தலைவனாய் இருக்க முடியாது. மக்களை சந்திப்பதற்கு எதற்கு டிஜிபியிடம் பர்மிஷன் கேட்க வேண்டும்? மக்களை சந்திப்பதற்கு போலீஸ் தேவையில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. விஜய் பாதிக்கப்பட்ட கரூர் மக்களிடம் வீடியோ காலில் பேசுவது அவரது இயலாமையை காட்டுகிறது. அவருக்கு தைரியம் இல்லை. இது தவறான முன்னுதாரணம். எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தவெக கொடி ஆட்டியது அவர்களது தொண்டரா, இல்லை அதிமுக தொண்டரா என தெரியாது. கொடியை வைத்து கூட்டணியை முடிவு செய்ய முடியாது. தலைவர்கள் பேசித்தான் கூட்டணியை முடிவு செய்ய முடியும். அதிமுக 25 பிரிவுகளாக பிரிந்திருப்பது அரசியல் சாபக்கேடு. ஆளுங்கட்சிக்கு எதிரான அலை தமிழகத்தில் இல்லை. இவ்வாறு கூறினார்.

Tags : Vijay ,John Pandian ,Kodaikanal ,Tamil Nadu ,Makkal ,Munnetra Kazhagam ,Kodaikanal, Dindigul district ,DGP ,
× RELATED ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசார...