நெல்லை, டிச. 27: தேசிய இளைஞர் விழாவையொட்டி நெல்லை, தென்காசியில் வரும் 29ம் தேதி கட்டுரை, கவிதை, புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் விஷ்ணு, தென்காசி கலெக்டர் சமீரன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 24வது தேசிய இளைஞர் விழாவினை முன்னிட்டு பாரம்பரிய இசை தனி நபர், பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு, தனி நபர், நாட்டுப்புறபாடல்கள் குழு, நவீன நடனங்கள், தனி நபர், பாரம்பரிய உடை, அலங்காரம் குழு, நவீன உடை அலங்காரம் குழு, வீதி நாடகம், கருப்பொருள், சமூக செய்தி, ஓவியம், நீர், தனிநபர், பென்சில் வரைப்படம், தனி நபர், சிற்பம் தயாரித்தல் மண், தனிநபர், புகைப்படம் எடுத்தல், சுற்றுச்சூழல் தனிநபர், கட்டுரை, ஆங்கிலம் தலைப்பு, புதிய இந்தியாவின் உற்சாகம், கவிதை எழுதுதல், ஆங்கிலம், யோகா, தனி நபர் ஆகிய மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் (29ம் தேதி) அன்று மேற்கண்ட முதல் நிலைப்போட்டிகள், மாவட்ட அளவில் மெய்நிகர் நடைமுறை வெர்ஜூவல் மோடு மட்டுமே நடைபெறும்.