சுரண்டையில் புதுப்பெண் கொலை திருப்பூரில் தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை

சுரண்டை, டிச. 27:   தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே உச்சிபொத்தை கிராமம் தெற்குத் தெருவைச் சேர்ந்த வேல்சாமி மகள் பூங்கோதை (22). கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூரில் செயல்படும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர்,  ஒரிசாவை சேர்ந்த ஜோகிந்தர் என்பவரை காதலித்து கடந்த 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து சுரண்டை திரும்பிய மணமக்கள் கோட்டைதெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்துவந்தனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு பூங்கோதை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து வந்த சுரண்டை போலீசார், உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

புகாரின் பேரில் சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இதில் திருப்பூரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த ஜோகிந்தர் சுரண்டையில் கட்டுமான வேலைக்கு சென்றுவந்தது பிடிக்காமல்  பூங்கோதையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதோடு சம்பவத்தன்று கொலையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தென்காசி எஸ்.பி. சுகுணா சிங், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் (பொறுப்பு) உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர், திருப்பூர் சென்று ஜோகிந்தரை பிடிக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>