எஸ்எம்ஏ பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா

நெல்லை, டிச. 27: அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நேஷனல் பப்ளிக் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். பள்ளியின் பாடகர் குழுவின் இசையோடு விழா துவங்கியது. மாணவர்கள் கிடியோன்ராஜ், ரபேல் ஆகியோர் கிறிஸ்துவின் மகத்துவம் பற்றி பாடல்கள் பாடினர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றி மாணவ, மாணவிகள் நிதிஸா, சுபிக்ஷா, ராஜ அவினேஷ், பிரஜின்ராஜா, பவ, விபிஷ்கா ஆகியோர் நாடகமாகவும், நடனமாகவும் வெளிப்படுத்தினர். கிறிஸ்துமஸ் கேக் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 6ம் வகுப்பு மாணவி கேத்ரின் மெர்சி, ருத்ரா சன்வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார், நர்சரி பிரைமரி ஒருங்கிணைப்பாளர் பாகிரதி, கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>