புஷ்பலதா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

நெல்லை, டிச.27: புஷ்பலதா சர்வதேச பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நேரலை மூலம் கொண்டாடப்பட்டது. பள்ளி பாடகர்கள் பிரார்த்தனை பாடல் மற்றும் கிறிஸ்துமஸ் பாடல்களைப்பாடினர். தொடர்ந்து நடனங்கள், கிறிஸ்துமஸ் மரம் குறித்த உரை,இனிப்பான ரொட்டி தயாரிக்கும் செய்முறை விளக்கம், கிறிஸ்துமஸ் நாடகம், இயேசு பிறப்பு குறித்த காட்சி,கிறிஸ்துமஸ் தாத்தா வருகை உள்ளிட்டவை தொடர்நிகழ்வுகளாக நடந்தன. நிகழ்ச்சிகளை நெல்லையில் இருந்து ஒரு மாணவரும் அபுதாபியில் இருந்து மற்றொரு மாணவரும் தொகுத்து வழங்கினர். நிகழ்வின் ஒரு பகுதியாக தேசிய உழவர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழாசிரியை தனரேகா வேளாண்மை ஊக்குவிப்பு குறித்துப் பேசினார். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் தலைமைவகித்தார். ஆசிரியர்களின் புதிய கருத்துக்களின் நிகழ்வுகள் மற்றும் விளக்கங்களை பள்ளி முதல்வர் பாராட்டினார்.

Related Stories:

>