×

ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

ஸ்டாக்ஹோம்: இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசு என்ற அடிப்படையில், ஆறு நாட்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும். அதன்படி ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் என நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கலைக்கு இருக்கும் சக்தியை நம்பிக்கையூட்டும் வகையில் தனது தனித்துவமான, தொலைநோக்கு பார்வை கொண்ட படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Laszlo ,STOCKHOLM ,LASZLO GRAZNAHORKAI ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...