ஈரோடு வழியாக சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்

ஈரோடு, டிச. 27:  ஈரோடு வழியாக சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ஈரோடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணை தலைவருமான பாஷா தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும், ஈரோடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணை தலைவருமான பாஷா தென்னக ரயில்வே பொதுமேலாளர் அவர்களுக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டம் மஞ்சள், ஜவுளி, பேப்பர் மில், சர்க்கரை மில், தொழிற்சாலைகள், மருத்துவ வசதி நிறைந்த பகுதியாகும். தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டித் தருவது ஈரோடு ரயில் நிலையம் தான். ஈரோட்டிலிருந்து சென்னை வரை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் மூலம் நாளொன்றுக்கு ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வருவாய் கிடைத்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் கடந்த 9 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலையும் உடனடியாக இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், ஈரோடு வழியாக கோவை பயணிகள் ரயிலையும், கோவை வழியாக இயக்கப்பட்டு வந்த சேலம் பயணிகள் ரயிலையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு ரயில் நிலையத்தில்  முன்பு இருந்ததை போல மூன்று கவுன்டர்களையும் செயல்பட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>