கல்லூரி மாணவிக்கு ஸ்மார்ட் போன்

சேந்தமங்கலம்,  டிச.27: நாமக்கல் அடுத்த எருமப்பட்டி ஒன்றியம் நவலடிப்பட்டி ஊராட்சியை  சேர்ந்தவர் சௌபர்ணிகா. இவர் சேலம் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இம்மாணவி குடும்பத்தின் ஏழ்மையை  அறிந்த  கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், மாணவியின் ஆன்லைன் படிப்பிற்கு தேவையான ஸ்மார்ட் போனை வழங்கினார்.  நிகழ்ச்சியில், எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன், தலைமை  செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்  அறிவழகன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜலிங்கம், பெரியசாமி, மாவட்ட விவசாய  தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நாக மூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி  துணை அமைப்பாளர் பார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்து கிருஷ்ணன்,  விமல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைவாணன், ஒன்றிய இளைஞரணி துணை  அமைப்பாளர் வினோத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எருமப்பட்டியில் மினி கிளினிக் திறப்பு

சேந்தமங்கலம், டிச.27: எருமப்பட்டி ஒன்றியத்தில் நேற்று ₹2,31 கோடியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு புதிய கட்டிடம், வடவத்தூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு மற்றும் பயனாளிகளுக்கு கடன்உதவி,  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நாமக்கல் ஆர்டிஓ கோட்டைகுமார் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு புதிய கட்டிடங்கள், மினி கிளினிக் ஆகியவற்றை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவர் பேசுகையில், ‘ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்கை முதல்வர் கொண்டு வந்துள்ளார். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. சேந்தமங்கலம் தொகுதியில் அரசு கல்லூரி, 2 தாலுகா அலுவலகம், நீர்மின் திட்டம், நீதிமன்றம் என பல்வேறு திட்டப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாலை மற்றும் குடிநீர் வசதி, புதிய கட்டிடங்கள் என 90 சதவீத பணிகள், எம்எல்ஏ முயற்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது,’ என்றார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் பாலமுருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, உறுப்பினர் தவமணி, ஒன்றியக்குழு தலைவர் லோகநாதன், தாசில்தார் ஜானகி, பிடிஓக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்கத்தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>