×

இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது

சென்னை: மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்து மத்திய பிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், 1 முதல் 7 வயது வரை உள்ள 14 குழந்தைகள், அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தனர். திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து, அம்மாநில அரசு விசாரித்த போது, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ‘ஸ்ரீசன் பார்மா’ என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து, மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ‘நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.’ மருந்துகள் காரணம் என்பது தெரியவந்தது.

இறந்த குழந்தைகளின் சிறுநீரக திசுவில், ‘டை எத்திலீன் கிளை சால்’ என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது தெரியவந்தது. ‘பெயின்ட், மை’ போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருந்தது. இதையடுத்து, மத்திய பிரதேச அரசு, அம்மருந்து நிறுவனத்தை சோதனை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

இதனையடுத்து அந்த மருந்துக்கு தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, உ.பி., ஜார்க்கண்ட், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த மருந்தை சாப்பிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் பிரவின் சோனி என்ற டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை இன்று கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் மறைந்திருந்த இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Coldrip ,Chennai ,Madhya Pradesh ,Madhya Pradesh Police ,Ranganathane ,Ashok city, Chennai ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...