இறைச்சி கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அழைப்பு

திருச்சி, டிச. 27: திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழி இறைச்சி கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை, தங்களது சொந்த வாகனத்தில் சொந்த செலவில் கழிவுகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களில் இருந்து எடுத்து சென்று அறிவியல் முறைப்படி மறுசுழற்சி செய்ய விருப்பமுள்ள கோழி கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை ஜனவரி 6ம் தேதிக்குள் பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். ஜனவரி 6ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>