பொது செயலாளர் அறிவிப்பு பெண் மீது தாக்குதல் தந்தை, மகன் கைது

திருச்சி, டிச. 27: திருச்சியில் பெண்ணை தாக்கிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். திருச்சி பிராட்டியூர் தெற்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் மனைவி மகேஸ்வரி (30). அதே பகுதியை சேர்ந்தவர் கோபி (48). இவரது மகன் விஜய் (24). தந்தையும், மகனும் நேற்று முன்தினம் மது போதையில் மகேஸ்வரி வீட்டின் முன் நின்று ஆபாசமாக பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை மகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி, விஜய் மற்றும் விஜயின் மனைவி ஜெனி ஆகியோர் சேர்ந்து மகேஸ்வரியை தாக்கினர். இதுதொடர்பாக கோர்ட் போலீசில் மகேஸ்வரி புகார் செய்தார். எஸ்ஐ தர் வழக்குப்பதிந்து தந்தை, மகனை கைது செய்தனர். ஜெனியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>