×

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிக்கான

திருச்சி, டிச. 27: திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலரும், ரங்கம் தொகுதிக்கு ரங்கம் ஆர்டிஓ, திருச்சி மேற்கு தொகுதிக்கு திருச்சி கோட்டாட்சியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர், திருவெறும்பூர் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர், லால்குடி தொகுதிக்கு லால்குடி ஆர்டிஓ, மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு திருச்சி உதவி ஆணையர் (கலால்), முசிறி தொகுதிக்கு முசிறி ஆர்டிஓ, துறையூர் (தனி) தொகுதிக்கு சிறப்பு துணை கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வாக்காளர் பதிவு அலுவலர்களாக (இஆர்ஓ) மணப்பாறை மற்றும் ரங்கம் தொகுதிக்கு ரங்கம் உதவி கமிஷனர் நிஷாந்த், திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், திருவெறும்பூர் தொகுதிக்கு திருச்சி ஆர்டிஓ விஸ்வநாதன், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு லால்குடி ஆர் வைத்தியநாதன், முசிறி மற்றும் துறையூர் தொகுதிக்கு முசிறி உதவி கமிஷனர் ஜோதி சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : constituencies ,Trichy ,district ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...