×

உலக புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா

திருத்துறைப்பூண்டி, டிச.27:உள்ள புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் நேற்று சனிக்கிழை என்பதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர். மேலும், இன்று காலை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதால் பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீராலத்தூர் ஊராட்சியில் புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளில் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா இன்று (27ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 5.22 மணிக்கு சனிஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

இதையொட்டி சுவாமிக்கும். பொங்கு சனீஸ்வரர் பகவானுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் மிதுனம் (அஷ்டமச்சனி), துலாம் (அர்த்தாஷ்டமசனி), தனுசு (பாதசனி), மகரம் (ஜென்மசனி), கும்பம் (ஏழரைசனி) ஆகும். தரிசன நேரங்களில் தரிசனம் செய்ய மட்டும் கோவிட்- 19 வழிகாட்டு நெறிமுறைப்படி பத்தர்கள் அனுமதிக்ப்படுவார்கள். கண்டிப்பாக அர்ச்சனை செய்யப்பட மாட்டாது. பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். காலை 7 மணிக்கு மேல்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கோயில் செயல் அலுவலர் சுரேந்தர் தெரிவித்துள்ளார். நேற்று சனிப்பெயர்ச்சி என்பதால் அதிகாலை முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். ஊராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்த வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பழனிச்சாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : world ,Thirukollikadu Ponku Saneeswarar Temple ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் உற்சாக...