மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி, டிச.27: பொன்னமராவதி அருகே காரையூர் பெருமாள் கோயிலில் தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 6ம் ஆண்டு ஐயப்ப சுவாமியின் மண்டலபூஜை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து, திருவிளக்கு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு மற்றும் காரையூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் பொன்னமராவதி அகில பாராத ஐயப்ப சேவா மற்றும் மண்டல பூஜை சுவாமி புறப்பாடு நடந்தது. பொன்.புதுப்பட்டி ராமாயண மடத்தில் இருந்து ஐயப்பன் வீதிவுலா தொடங்கி முக்கிய வீதிவழியாக சென்று சிவன்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

Related Stories:

>