காணொளியில் கலந்துரையாடல் பிரதமர் மோடி நிகழ்ச்சியை டிவியில் பார்த்த விவசாயிகள்

புதுக்கோட்டை, டிச.27: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வேளாண்மை அலுவலகம் மற்றும் வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண்மை அறிவியல் மைய கட்டிடத்தில் பாரத பிரதமர் விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நலத்திட்டங்களை வழங்கி விவசாயிகளுடன் கலந்துரையாடல் செய்த காணொளிக் காட்சியை 100 விவசாயிகளுடன் அமர்ந்து தொலைக்காட்சியில் விவசாயிகள் பார்வையிட்டனர். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் தலைமையில் கொம்பன் தேசிய பயிர் வகை ஆராய்ச்சி மைய தலைவர் (பொறுப்பு) பிரபுகுமார் முன்னிலையில் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சி முகாமில் திருவரங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கி வரும் கோடிக்கணக்கான மதிப்பிலான விவசாய நலத்திட்டங்களை பற்றியும்,

அதனை விவசாயிகள் முழுமையாக பெற்று பயன் அடைய முறையாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கிடைத்திட ஆலோசனை வழங்கினார். மேலும் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டங்களை ஒவ்வொரு விவசாய குடும்பத்தில் உள்ளவர்களும் பெற்றிட துரித நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன் நிரவி புயல் காரணமாக 2,000 ஏக்கர் பரப்பளவில் நெல், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் 800 ஏக்கர் பரப்பளவிற்கு உரிய ஆவணங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பேசினார்.

ஏம்பல் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி இயக்குனர் பொறுப்பு பிரபுகுமார் தென்னையை தாக்கும் நோய் பற்றியும், சென்னை பின்னூட்டம் இடுவது பற்றியும், காண்டாமிருக வண்டுகளிடம் இருந்து தென்னை மரத்தை பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் மற்றும் வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>