×

ஆண்டிமடம் அருகே தாயிடம் இருந்து தூக்கி சென்ற ஒன்றரை வயது குழந்தை மீட்பு

ஜெயங்கொண்டம், டிச.27: ஆண்டிமடம் அருகே தாயிடம் இருந்து தூக்கி சென்ற ஒன்றரை வயது குழந்தையை மீட்ட போலீசாருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பட்டணங்குறிச்சி கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மகள் அந்தோணி மேரி (23). இவருக்கும் கடலூர் மாவட்டம் சாவடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (30) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கமாம். நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது இளவரசனிடம் கோபித்துக் கொண்டு பட்டணம் குறிச்சியில் உள்ள தந்தை வீட்டிலேயே வந்து தங்கிவிட்டார்.

தற்போது பன்னீர்செல்வம் என்கின்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளவரசன் சவரிமுத்து வீட்டிற்கு வந்து குழந்தை பன்னீர்செல்வத்தை மட்டும் சாவடி குப்பத்திற்கு தூக்கி சென்றுவிட்டார். உடனே சவரிமுத்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அரியலூர் எஸ் பி சீனிவாசன் உத்தரவின்பேரில் ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் கடலூர் மாவட்டம் சாவடி குப்பம் சென்று இளவரசனிடம் இருந்த குழந்தை பன்னீர்செல்வத்தை மீட்டு நேற்று காலை அந்தோணிமேரியிடம் போலீசார் ஒப்படைத்தனர். துரித நடவடிக்கை எடுத்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை எஸ்பி சீனிவாசன் பாராட்டினார். மேலும் போலீசாருக்கு சவரிமுத்து குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags : Andimadam ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது