×

மயிலாடுதுறையில் பரபரப்பு கீழ்வேளூர் ஒன்றியம் 64 மணலூர் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் திமுக கிராமசபை கூட்டம்

கீழ்வேளூர், டிச.27: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் 64 மணலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினரும் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். கீழ்வேளூர் ஒன்றியகுழு துணைத் தலைவர் புருஷோத்தமதாஸ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவகுமார், பாப்பிதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் வரவேற்றார். கூட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கோவிந்தராசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொதுமக்கள் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் காலத்தில் சாகுபடி பணி செய்ய முடியவில்லை, நீண்ட நாட்களாக சாலைகள் போடாததால் சாலைகள் மிக மோசமாக உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். விளைவித்த நெல்லை விற்பனைசெய்ய நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. 64 மணலூர் ஊராட்சியிலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.

கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், ஒன்றிய துணைச் செயலாளர் பஞ்சுநாகராஜன், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், நடராஜன், வீரமணி, கிளை செயலாளர்கள் சந்தாகம், தமிழ்ஞானம், ஜெகதீஸ்வரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகர் 14வது வார்டு அண்ணாசிலை அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் குண்டாமணி செல்வராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சம்பத் முன்னிலை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.கே.சங்கர், ரத்தினவேல் உட்பட பலர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா வழங்கவேண்டும், ரேஷன்கடையில் அனைத்துப் பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சியில் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இமயநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் பிரியாபெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்டக் கழக பொறுப்பாளர் நிவேதாமுருகன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள், சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், அருட்செல்வன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கிராம மக்கள், பெரும்பாலும் 90 சதவிகிதம் கோயில் நிலத்தில் குடியிருப்பதாகவும் அதற்கு பட்டா தேவை என்றும் கேட்டனர்.

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லசேதுரவிக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரன் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆச்சாள்புரம் ஊராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 720 பேருக்கு விண்ணப்பித்து பல மாதங்களாகியும் இதுவரை வேலை அடையாள அட்டை வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் பேசுகையில், அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவையான அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கிடவும் ஆவண செய்வதாக தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து உதவிகளும் உடனடியாக செய்து முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். கூட்டத்தில் ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayiladuthurai ,Lower Vellore Union ,AIADMK ,Manalur ,meeting ,Grama Niladhari ,DMK ,
× RELATED வாலிபர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை