×

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொது மக்கள் 18 பேரிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில், பொதுமக்கள் 18 பேரிடம் நேரடியாக போலீஸ் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்து வருகிறது.

அந்த வகையில் இன்று காலை நடந்த குறை தீர்வு முகாமில், போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு, பெண்கள் உட்பட மொத்தம் 18 பேரிடம் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார். பிறகு வாங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியின் போது சென்னை காவல்துறை தலைமையிட துணை கமிஷனர் கீதா உடன் இருந்தார்.

Tags : Commissioner ,Arun ,Chennai Police Commissioner ,Chennai ,Police Commissioner ,Chennai Metropolitan Police Commissioner ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து