31ம் தேதி போராட்டம் அறிவிப்பு பூம்புகாரில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

சீர்காழி, டிச.27: சீர்காழி அருகே பூம்புகாரில் 2014ம் ஆண்டு தாக்கிய சுனாமியின்போது உயிரிழந்தவர்களின் நினைவாக சுனாமி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமி ஆழிப்பேரலையின் 16ம் ஆண்டு நினைவு தினமான நேற்று ஏராளமானவர்கள் மலர் வளையத்துடன் ஊர்வலமாக சென்று சுனாமி நினைவு தூண் முன்பு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், திமுக ஒன்றிய செயலாளர் சசிகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்து தேவேந்திரன், ஊராட்சி தலைவர் முல்லைவேந்தன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் நெடுஞ்செழியன், மணிமேகலை, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமரன், ஊராட்சி செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>