வாகன ஓட்டிகள் கடும் அவதி பைக்கில் சென்ற பெண்ணிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு

கரூர், டிச. 27: கரூர் தாந்தோணிமலை அருகே பைக்கில் உட்கார்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தாலிச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். கரூர் தாந்தோணிமலை கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலா(42). டெய்லர். இவர், நேற்று முன்தினம் மாலை கரூர் சென்று விட்டு தனது மகளுடன் பைக்கில் கணபதிபாளையம் சென்றார். பைக்கை இவரின் மகள் ஓட்டிச் சென்றார்.இவர்களின் பைக் சுங்ககேட் அருகே சென்ற போது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், கலாவின் கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கலா அளித்த புகாரின் அடிப்படையில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>