மக்கள் வலியுறுத்தல் தாந்தோணிமலை வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் சிதிலமடைந்த சிறுவர் பூங்கா சீரமைத்து தர மக்கள் கோரிக்ைக

கரூர், டிச. 27: தாந்தோணிமலை வீட்டு வசதி வாரிய வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள சிறுவர் பூங்கா சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. ஏராளமான குடியிருப்புகள் இதில் வசித்து வருகின்றனர். குடியிருப்பு வளாகம் கட்டும் போதே, சிறுவர், சிறுமிகள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைத்து தரப்பட்டது. ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே பூங்கா வளாகத்தின் உட்புறம் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இதனை புதுப்பித்து பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை விரைந்து சீரமைத்து தர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>