வணிகர்கள், ஆலோசகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கரூரில் நாளை நடக்கிறது

கரூர், டிச. 27: வணிகர்கள் மற்றும் விற்பனை வரி ஆலோசகர்களுக்கான (எஸ்டிபி) விழிப்புணர்வு கூட்டம் டிசம்பர் 28ம்தேதி காலை 10.30மணியளவில் கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் 2017ன்படி, வரும் ஜனவரி 1ம்தேதி முதல் புதுமுறை நமூனா தாக்கல் என்ற முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பான வணிகர்கள் மற்றும் விற்பனை வரி ஆலோசகர்களுக்கான (எஸ்டிபி) விழிப்புணர்வு கூட்டம் நாளை (28ம்தேதி) காலை 10.30மணியளவில் கரூர் திண்ணப்பா திரையரங்கம் அருகேயுள்ள மண்டபத்தில் துணை ஆணையர் (மாநிலவரி) தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வணிகர்கள் மற்றும் விற்பனை வரி ஆலோசகர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>