×

திருச்சி அருகே கோனார்சத்திரத்தில் இடிந்த நிலையில் பாழடைந்த நிழற்குடை

திருச்சி, டிச.26: திருச்சி வயலூர் ரோடு, கோனார் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இடிந்த நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடன் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து அல்லித்துறை மற்றும் சோமரசம்பேட்டை வழியாக வயலூர் செல்லும் வழித்தடத்தில் கோனார் சத்திரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு கோனார்சத்திரம், மல்லியம்பத்து, செங்கதிர்சோலை, பெருங்குடி, ஆளவந்தான், நல்லூர், வாசன் சிட்டி மற்றும் நாச்சிக்குறிச்சி, இனியானூர் என்று பல கிராமங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள், மாணவர்கள் கட்டட வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிய செல்பவர்களும் இந்த பாழடைந்து இடிந்த நிலையில் உள்ள நிழற்குடையின் பஸ் நிறுத்தத்திலிருந்துதான பயணிக்க வேண்டும். மழை வெயில் காலங்களிலும் மக்கள் வெட்ட வெளியில் நின்றுதான் பஸ்களுக்கு காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக நிற்கும் பயணிகள் இந்த நிழற்குடை அருகே அச்சத்துடன் நிற்க வேண்டிய அவலநிலையும் உள்ளது. எனவே போர்க்கால நடவடிக்கை எடுத்து புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூ., மணிகண்டம் ஒன்றிய துணை செயலாளர் முருகன், கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Tags : ruins ,Konarsattram ,Trichy ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்