சத்திரம் பஸ் நிலைய பகுதியிலுள்ள துவாக்குடி பஸ் ஸ்டாப்பில் ஸ்டாண்ட் பெயர் பலகை வைக்க அனுமதி மறுப்பு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

திருச்சி, டிச. 26: திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் 8க்கும் மேற்பட்ட ஆட்ேடா ஸ்டாண்ட் உள்ளது. இதில் தற்போது சத்திரம் பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. எனவே துவாக்குடி செல்லும் பஸ்கள் நின்று செல்லும் இடத்தின் அருகே சிஐடியூ சார்பில் ஆட்டோ ஸ்டாண்ட் துவங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அங்கு சிஐடியூ சார்பில் நிரந்தரமாக ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்படுத்தும்விதமாக பெயர் பலகை வைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த கோட்டை போலீசார் அங்கு சென்று பெயர் பலகை வைக்க கூடாது என கூறி அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் அப்பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் கட்டடத்தில் உள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதையறிந்த கோட்டை உதவி கமிஷனர் ரவிஅபிராம், சம்பவயிடம் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு துவங்கும் வரை தற்காலிக பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் தொடரலாம், மேலும் அங்கு பெயர் பலகை வைக்க கூடாது என கூறப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை ஆட்டோ டிரைவர்கள் விலக்கிக்கொண்டனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>