திருவாரூர் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு திரளானவர்கள் பங்கேற்பு

திருவாரூர், டிச. 26:கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருவாரூர் பிடாரிகோயில் தெருவில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும், நேற்று காலையிலும் திருப்பலி எனப்படும் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் நேதாஜி சாலையில் உள்ள தென்னிந்திய திருசபை, பனகல்சாலையில் உள்ள தமிழ்லுத்திரன்திருசபை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் திருப்பலி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

Related Stories:

>