திரளான பக்தர்கள் தரிசனம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி

பேராவூரணி, டிச. 26: பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் வேம்பையன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 85 பள்ளிகளை சேர்ந்த 236 ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மானியம், செலவீனம் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்களுக்கு பள்ளி தரநிலை மேம்பாட்டு பயிற்சி, மழைக்கால பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>