×

இன்று முதல் விநியோகம் அரிவாளால் வெட்டி நகை கொள்ளையில் திருப்பம் சிங்கப்பூரிலிருந்து கூலிப்படை ஏவி பெண்ணை கொலை செய்ய முயற்சி

பொன்னமராவதி, டிச.26: பொன்னமராவதி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டி நகை பறித்துச் சென்ற மர்மநபர்கள் அவரை கொலை செய்ய வந்த கூலிபடையினர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் சரகம் , கோவனூரில் சாந்தி என்பவர் தனது வீட்டின் முன்பு அமர்ந்து கைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர்கள் 5 பேர் தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் போது சாந்தி அணிந்திருந்த செயினை பிடுங்கிய போது சாந்தி தடுக்க முற்ப்பட்டார். அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு சாந்தியின் தலையில் கொலை செய்யும் நோக்கத்துடன் வெட்டியும் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்தனர்.

அப்போது சாந்தி போட்ட சத்தத்தில் அக்கம்பக்கம் இருந்த ஊர்காரர்கள் வந்ததும் அங்கிருந்து தங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர் . உடனே சம்பவ இடத்திற்கு பொன்னமராவதி காவல் துறையினர் சென்று உள்ளனர் . இதனிடையே ஊர்காரர்கள் எதிரிகளை துரத்தி செல்லும் போது கோவனூர் விலக்கில் அதில் ஒரு எதிரியான முகிலன் என்பவர் தடுமாறி வழுக்கி விழுந்து உருண்டதில் எதிரி முகிலனுக்கு வலது கைமணிக் கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது , முகிலனை விசாரணை செய்ததில் மேற்படி சாந்திக்கும் அவரது வீடு அருகில் இருக்கும் வசந்தா என்பவருக்குமிடையே சுமார் 3 வருடங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக வாய்த் தகராறு முற்றி சண்டை எற்பட்டுள்ளது . மேலும் சாந்தி வசந்தாவை மிகவும் அவமானபடுத்தியுள்ளார் . இதனை முன்விரோதமாக கொண்டு வசந்தா மிகுந்த உளைச்சலில் இருந்து உள்ளார். தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் வசந்தாவின் மகன் தங்கத்திடம் சாந்தி தன்னை மிகவும் அவமானப்படுத்தியதாக கூறியுள்ளார்.

உடனே அவரது மகன் தங்கம் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர் மூலமாக சிவகங்கையைச் சேர்ந்த அழகு (எ) அழகுபாண்டி என்பவரை தொடர்பு கொண்டு சாந்தி தனது அம்மா வசந்தாவை அவமானப்படுத்திய விபரத்தை சொல்லியும் அவர்களை பழிவாங்க வேண்டும் என்றும் அவர்களை உயிருடன் விடக்கூடாது என்றும் கூறியுள்ளார் . இதனை கேட்ட அழகு (எ) அழகுபாண்டி தனக்கு தெரிந்த கூலிப்படையினர் உள்ளனர் என்றும் அவர்களை வைத்து சாந்தியை கொலை செய்துவிடலாம் எனவும் கூறியுள்ளார் . உடனடியாக அழகு (எ) அழகுபாண்டி தனக்கு தெரிந்த பரமக்குடியில் உள்ள கூலிப்படையினரை தொடர்பு கொண்டு சாந்தியை கொலை செய்ய வேண்டும் என்று கூறி அங்கிருந்து முகிலன் , ஆனந்த், ஆசை . அமுல் ஆகிய கூலிப்படையினரை ரூ .50,000 / -க்கு ஏற்பாடு செய்தும் அதன்படி கடந்த 22.12.2020 - ம் தேதி இரவு வரவழைத்து சிவகங்கையில் வைத்து சாந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர் . அதன்படி 23.12.2020ம் தேதி காலை 11 மணியளவில் சாந்தியை கொலை செய்யும் நோக்கத்துடன் சாந்தியின் வீட்டிற்கு வந்தும் கொலைக்கான உண்மையான காரணத்தை மறைத்தும் நகைக்காக கொலை நடந்துள்ளது என்று திசை திருப்பும் நோக்கத்தில் எதிரிகள் சாந்தியை வெட்டியும் தாலி செயினை பறித்தும் சென்றுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் உதவியுடன் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த முகிலனை பீடித்து காவல் துறையின் நேர்த்தியான மற்றும் துரித விசாரணையின் மூலம் மேற்கண்ட சம்பவமானது நகைக்காக நடக்கவில்லை எனவும் பக்கத்து வீட்டின் குடும்ப சண்டையின் காரணமாகவே நடைபெற்றுள்ளது என்றும் துப்பு துலக்கியும் குற்றவாளிகளை பிடித்த பொன்னமராவதி டிஎஸ்பி.செங்கமலக்கண்ணன், பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் தனிப்படையினரை புதுக்கோட்டை எஸ்பி. பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

Tags : jewelry robbery ,Singapore ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...