×

வரகூர், அந்தூர் கிராமங்களில் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், டிச.26: வரகூர், அந்தூர் கிராமங்களில் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் மேற்பார்வையில் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஎபி நீதிராஜ் தலைமையில், குன்னம் தாலுகா வரகூர் மற்றும் அந்தூர் ஆகிய கிராம பொதுமக்களுக்கு பெரம்பலூர் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, சப்.இன்ஸ்பெக்டர் ஜான், ஏட்டு சுகன்யா ஆகியோர் இணைந்து கேடயம் திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறை மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் கேடயம் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

முடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல் துறையின் கேடயம் திட்டத்தின் உதவி எண்கள் 63830 71800, 9384501999 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா முயற்சியில் உருவாக்கப்பட்ட விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற செயலி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags : children ,women ,villages ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...