கிறிஸ்துமஸ் விழா

தரங்கம்பாடி, டிச.26: தரங்கம்பாடி மற்றும் பொறையார் பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். தரங்கம்பாடியில் உள்ள சியோன் கிறிஸ்தவ ஆலயம், புது எருசேலம் தேவலாயம், புனித ஜெபமாலை அன்னை ஆலயம் மற்றும் பொறையாரில் உள்ள பெத்லோகம் தேவலாயம் ஆகிய நான்கு தேவலாயங்களும் கிறிஸ்துமஸை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் புத்தாடை உடுத்தி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

Related Stories:

>