×

கலெக்டர் அழைப்பு ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மஹா சண்டி ஹோமம்

கரூர், டிச. 26: ஆண்டுதோறும் இந்த சங்கத்தின் சார்பில் மஹா சண்டி ஹோமம் நடைபெற்று வருகிறது. 34ம் ஆண்டு நிகழ்வாக ஈஸ்வரன் கோயில் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வினை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அனுஞ்கை, சர்வதேவதா பிரார்த்தனை, மஹா சங்கல்பம் போன்ற பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 7மணி முதல் மதியம் 12.30மணி வரை மஹா கணபதி ஹோமம் உட்பட 13 அத்தியாய பூஜைகள் நடத்தப்பட்டு, சன்னதி பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த சண்டி ஹோம நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Call Maha Chandi Homam ,Ayyappa Seva Sangam ,
× RELATED ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நாளை அன்னதான விழா