இருதயகுளத்தில் கிறிஸ்துமஸ் விழா

வி.கே.புரம், டிச. 26: வி.கே.புரம் இருதயகுளத்தில் உள்ள தூய லூர்தன்னை திருத்தல கெபியில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. வி.கே.புரம் இருதயகுளத்தில் உள்ள தூய லூர்தன்னை திருத்தலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பங்குதந்தைகள் சைமன்செல்வன், ஆண்ட்ரூஸ் ஆகியோர் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடத்தினர். இதில் கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 23ம் தேதி ஏழை, எளியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக குழு உறுப்பினர்கள் பாஸ்கர்பால், பாப்பையா, நேவிராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories:

>