×

புளியங்குடியில் செயற்குழு கூட்டம் திமுக, கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதே இலக்கு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பேச்சு

புளியங்குடி, டிச. 26: திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், புளியங்குடியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. மாநில வர்த்தக அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ரசாக், மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூத், துணை செயலாளர்கள் மாடசாமி, பேபி ரஜப்பாத்திமா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை பேசுகையில், விடியலை நோக்கி என்ற பிரசார திட்டத்தின்படி தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள 9 பேரூர், 5 ஒன்றியம், 3 நகராட்சி பகுதிகளில் சுமார் 170 இடங்களில் மக்கள் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். இதில் கடந்த 10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னைகள், கலைஞர் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். கூட்டம் முடிந்தவுடன் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பு அச்சிட்ட பிரசுரங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற வேண்டும். இதில் மகளிரணியினர் பொறுப்புகளை எடுத்து கொள்ள வேண்டும்.  நாளை(27ம் தேதி) நெல்லைக்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திரண்டு செல்ல வேண்டும்.

29ம் தேதி மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி விடியலை நோக்கி பிரசார பயணத்திற்கு வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும். தலைவர் ஸ்டாலினை பின்பற்றி நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால் 234 தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம். அனைவரும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து திமுக, கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதே இலக்கு என பாடுபட வேண்டும், என்றார். கூட்டத்தில் நகர செயலாளர்கள் புளியங்குடி ராஜகாந்த், கடையநல்லூர் சேகனா, செங்கோட்டை கல்யாணி, ஒன்றிய செயலாளர்கள் பொன் முத்தையாபாண்டியன், செல்லத்துரை, ரவி சங்கர், லாலா சங்கரபாண்டியன், ராமையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வசந்தம் சுப்பையா, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது, தொழிலதிபர் பாலசுப்பிர மணியன், பேராசிரியர் நீலமேகம், ராஜவேல் பாண்டியன், மீனாட்சி சுந்தரம், முத்து, குழந்தைராஜ், முப்புடாதி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags : Executive Committee Meeting ,Officer ,alliance candidates ,Tenkasi North District ,DMK ,
× RELATED டூவீலர் மெக்கானிக் சங்க மாநில செயற்குழு கூட்டம்